“ஜூன் 8 முதல் மாயமான இளைஞர்…” ஐஸ்கிரீம் ஃப்ரீசரைத் திறந்த போலீஸுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பின்னணியில் முக்கோணக் காதல்.. உறைய வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஜூன் 8 முதல் மாயமான இளைஞர்…” ஐஸ்கிரீம் ஃப்ரீசரைத் திறந்த போலீஸுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பின்னணியில் முக்கோணக் காதல்.. உறைய வைக்கும் பின்னணி..!!

Published

on

திரிபுராவின் அகர்தலாவில் கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் மாயமான 26 வயது எலக்ட்ரீஷியன் சரிஃபுல் இஸ்லாம், முக்கோணக் காதல் விவகாரத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ஐஸ்கிரீம் ஃப்ரீசருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிச் சம்பவம் அம்பலமாகியுள்ளது. அகர்தலா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றி வந்த சரிஃபுல், 20 வயது இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணின் உறவினரான திவாகரும் அவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் சரிஃபுலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பேசாமல் இருந்ததைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட திவாகர், அப்பெண்ணைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், உடல் ரீதியாகத் துன்புறுத்தவும் சரிஃபுல்லைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, எம்பிபிஎஸ் மாணவியான திவாகர், ஜூன் 8-ம் தேதி தெற்கு இந்திராநகரில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு சரிஃபுல்லை வரவழைத்து, மேலும் மூன்று பேரின் உதவியுடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை ஒரு டிராலி பைக்குள் திணித்த கும்பல், மறுநாள் கந்தாசெர்ராவில் வசிக்கும் திவாகரின் பெற்றோரை அகர்தலாவிற்கு வரவழைத்து அந்தப் பையை ஒப்படைத்துள்ளது. அவர்கள் அந்த டிராலி பையைத் தங்கள் ஊருக்கு எடுத்துச் சென்று, தங்களது கடையில் இருந்த ஐஸ்கிரீம் ஃப்ரீசருக்குள் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மறைத்து வைத்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர் கிரண் குமார் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்தக் கொடூரச் சதி அம்பலமானதைத் தொடர்ந்து, திவாகர், அவரது பெற்றோர் உள்ளிட்ட மொத்தம் 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in