CRIME
“எங்ககிட்டேயேவா..” நடுரோட்டில் வாலிபரின் அநாகரீக செயல்.. அடுத்த நொடியே ஸ்கூட்டரை நிறுத்தி இறங்கிச் சம்பவம் செய்த சிங்க பெண்கள்.. இணையத்தில் குவியும் சல்யூட்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், சாலையில் சென்ற இளம்பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞருக்கு, அந்தப் பெண்கள் நடுரோட்டிலேயே தக்க பதிலடி கொடுத்த துணிச்சலான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிஜ்னோரில் உள்ள மண்டாவர் சாலையில் நேற்று இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் சுற்றித் திரிந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்கள் மீது ஏதோ ஒரு பொருளை வீசி எறிந்ததுடன், அவர்களை நோக்கி ஆபாசமான வார்த்தைகளால் கேலி செய்துள்ளார்.
இளைஞரின் இந்த அநாகரிகமான செயலால் கடும் ஆத்திரமடைந்த அந்த இரண்டு இளம்பெண்களும் சற்றும் அஞ்சாமல் உடனடியாகத் தங்களது ஸ்கூட்டரை நிறுத்தினர். பின்னர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த பெண்கள், நடுரோடு என்றும் பாராமல் சரமாரியாக அறைந்தும், உதைத்தும், குத்தியும் தக்க பாடம் புகட்டினர். இச்சம்பவத்தைக் கண்டு அங்கு திரண்ட பொதுமக்கள், உடனடியாகத் தலையிட்டு அந்த இளைஞரை அங்கிருந்து விரட்டியடித்தனர். இளம்பெண்களின் இந்தத் துணிச்சலான பதிலடி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
