LATEST NEWS
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆப்பு… லிப்ட் பயன்பாட்டில் உடனடியாக அமலுக்கு வந்த கடும் கட்டுப்பாடு…!!
மகாராஷ்டிராவில் சோசடி மற்றும் வணிக வளாகங்களில் 12 வயது மற்றும் அதற்குட்பட்ட குழந்தைகள் தனியாக லிப்ட், எஸ்கலேட்டர் அல்லது மூவிங் வாக்வே ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினருடன் இருக்கும்போது குழந்தைகள் இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
லிப்ட் பழுது மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், அனைத்து லிப்ட்களுக்கும் ஆண்டுதோறும் பாதுகாப்புத் தணிக்கையும், மாதந்தோறும் முறையான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் விபத்து நேர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக உள்ளூர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து லிப்ட்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதுடன், அவசரகால நடவடிக்கைகளுக்காக லிப்ட்களை இயக்கத் தனியாக ஒரு ஆபரேட்டர் இருக்க வேண்டும் என்றும் புதிய விதிகளில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
