CRIME
அடச்சீ… நள்ளிரவில் நண்பனுடன் உல்லாசம்… நேரில் பார்த்த கணவன் செய்த கொடூர செயல்.. குழந்தைகள் கண் முன்னே அரங்கேறிய பயங்கரம்..!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி கொத்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவருக்கும் பொன்னழகு (22) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, முகேஷ் (5), முகிலன் (3), ஹர்சிதா (2) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். சரவணக்குமாரின் நண்பரான பாலையம்பட்டி யாதவர் காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தராஜூடன் (30), பொன்னழகுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. சரவணக்குமார் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும்போதெல்லாம் ஆனந்தராஜை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் கணவன், மனைவி போல் குடித்தனம் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சரவணக்குமார் தனது மனைவியையும், நண்பர் ஆனந்தராஜையும் கடுமையாக எச்சரித்தும், அந்த ஜோடி அதைக் கண்டுகொள்ளாமல் தங்கள் உறவைத் தொடர்ந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய சரவணக்குமார், தனது மனைவியும் கள்ளக்காதலன் ஆனந்தராஜும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் கைக்கு கிடைத்த பொருட்களைக் கொண்டும், அங்கிருந்த பாறாங்கல்லை தூக்கி அவர்கள் தலையிலும் போட்டு கொடூரமாக கொலை செய்தார். இதைக் கண்ட தம்பதியரின் 3 குழந்தைகளும் பயத்தில் அலறினர்; சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இருவரின் உடல்களைப் பார்த்து அதிர்ந்துபோய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தலைமறைவாகி அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த சரவணக்குமாரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். தாய் கொலை செய்யப்பட்டு, தந்தை சிறைக்குச் சென்ற நிலையில் பரிதவிப்பில் உள்ள 3 குழந்தைகளின் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
