CRIME
“யாரு டா இவன்..?” ஆள் இல்லாததைப் பார்த்து உள்ளே நுழைந்த திருடன்.. மதுபானக் கடை கவுன்ட்டரில் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
நள்ளிரவு நேரத்தில் மதுபானக் கடையில் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட திருடன் ஒருவன், சத்தமின்றி கடையின் கவுன்ட்டர் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்ட அந்த நபர், கவுன்ட்டர் மேஜையில் வைக்கப்பட்டிருந்த செல்போனைக் கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான முழு காட்சிகளும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. தற்போது இந்தச் சிசிடிவி வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்தக் காட்சிகளின் அடிப்படையில் செல்போனைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
