CRIME
திக் திக் நிமிடங்கள்.. தடுப்புச் சுவரில் மோதி எதிர் திசைச் சாலையில் பந்து போல் உருண்டு கவிழ்ந்த கார்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் சதர் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள சந்திரலோக் கார்டன் முன்பு, அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது.
மோதலின் வேகத்தில் அந்த கார் பலமுறை உருண்டு, சாலையின் எதிர் திசையில் சென்று தலைகீழாகக் கவிழ்ந்தது. நெஞ்சை உறைய வைக்கும் இந்தப் பயங்கர விபத்தின் காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. தற்போது இந்தப் பகீர் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சாலைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதன் ஆபத்தை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
