“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க..” இன்ஸ்டா பிரபலம் மீது ஒருதலைக் காதல்.. வீடு தேடிச் சென்று ரகளை செய்த இளைஞர்… கடைசியில் நேர்ந்த பயங்கர முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க..” இன்ஸ்டா பிரபலம் மீது ஒருதலைக் காதல்.. வீடு தேடிச் சென்று ரகளை செய்த இளைஞர்… கடைசியில் நேர்ந்த பயங்கர முடிவு..!!

Published

on

டெல்லியை சேர்ந்த இளம்பெண் நேஹா பிஸ்ட், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்; இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேஹா பதிவிட்டு வர, பாலோயர்களும் அவருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இதனிடையே, உத்தர பிரதேச மாநிலம் காசிபூரை சேர்ந்த அபினவ் (சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர்), இன்ஸ்டாகிராமில் நேஹாவை பின்தொடர்ந்து அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

கடந்த 7-ந்தேதி டெல்லியில் உள்ள நேஹாவின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற அபினவ், அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டு, நேஹாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேஹாவின் உறவினர்கள் அபினவ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த நிலையில் இருந்த அபினவை மீட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு சிகிச்சை பெற்று வந்த அபினவ், கடந்த 15-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, நேஹாவின் தந்தை மற்றும் உறவினர் ஒருவரை கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், நேஹா மீது அபினவ் ஒருதலைக் காதல் கொண்டிருந்ததும், அதே சமயம் நேஹாவுக்கு அபினவ் பற்றி எதுவும் தெரியாது என்பதும் தெரியவந்துள்ளது; தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in