LATEST NEWS
“போட்டோஷூட் எடுக்க போறேன்பா..” நண்பர்களுடன் ஆசையாகச் சென்ற 17 வயது சிறுவன்..! ரோட்டை கிராஸ் பண்ணும்போது மின்னல் வேகத்தில் மோதிய கார்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
நவம்பர் 22 அன்று அதிகாலையில், 17 வயதான பவின் சவுகான் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பினார். அவர் சாலையைக் கடந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த இன்னோவா கார் அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நவம்பர் 25 புதன்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஆஸ்கர் வில்லா மற்றும் டி-மார்ட் அருகே காலை சுமார் 7.00 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பவின் போனுக்கு அவரது தந்தை தர்மேந்திரபாய் சவுகான் அழைத்தபோது, அவசர ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் போனை எடுத்து விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளார். முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவின், பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்; அங்கு அவரது தலையின் பின்பகுதியில் ரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தப்பியோடிய இன்னோவா கார் ஓட்டுநர் மீது பவினின் தந்தை புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக ஆய்வாளர் ஜி.ஆர். சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார்.
