குபேரரை இப்படி வழிபட்டால் வாழ்வில் பணக்கஷ்டம் நெருங்கவே நெருங்காது..? உங்கள் வாழ்க்கையை திருப்பிப்போடும் அதிர்ஷ்ட மந்திரம் இதுதான்..! – cinefeeds
Connect with us

LifeStyle

குபேரரை இப்படி வழிபட்டால் வாழ்வில் பணக்கஷ்டம் நெருங்கவே நெருங்காது..? உங்கள் வாழ்க்கையை திருப்பிப்போடும் அதிர்ஷ்ட மந்திரம் இதுதான்..!

Published

on

செல்வத்தின் கடவுள் குபேரர்தான். ஒருவருக்கு கடன் தொல்லை நீங்கி வாழ்க்கையில் செல்வம் பெருக குபேரரைத்தான் வழிபட வேண்டும்.

குபேரரை வழிபடுவதற்கான வழிமுறைகளும், சிறப்பு மந்திரங்களும் உள்ளது.

Advertisement

கடவுள் மீது முழு நம்பிக்கையுடனும் தூய மனதுடனும் இந்த மந்திரங்களை கூற வேண்டும்.அப்பொழுதுதான் நீங்கள் கேட்கும் வரம் கிடைக்கும்.

இந்த மந்திரங்கள் உங்கள் வாழ்க்கையில் செல்வம் மற்றும் அமைதியை மட்டுமின்றி வெற்றியையும் கொடுக்கும்.

Advertisement

குபேர மந்திரத்தை தினமும் உச்சரிப்பது உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகளை வரவேற்கும்.

இந்த பதிவில் குபேரரின் அருள் கிடைக்க கூற வேண்டிய மந்திரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Advertisement

குபேர பண மந்திரம்:
” ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்ளீம் விட்டேஸ்வராய நமஹ ” இந்த மந்திரத்தின் பொருள் ” செல்வத்தின் கடவுளான தீய சக்திகளை அழிக்கும் குபேரா உன்னை வணங்குகிறேன் “. உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம் நீங்க விரும்பினால் காலை நேரத்தில் தியானம் செய்யும் நிலையில் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அப்படி கூறினால் உங்கள் வாழ்க்கையில் விரைவில் பணக்கஷ்டம் விலகுவதை உணருவீர்கள். நீங்கள் ஆசைபடும் வாழ்க்கையை மனதில் நினைத்து கொண்டே மந்திரத்தை கூறுங்கள்.

மஹாலக்ஷ்மி குபேர மந்திரம்:
” ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை சே வித்மஹே விஷ்ணு பத்தினியாய சே தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத் ஓம்” இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நீங்கள் மகலக்ஷ்மியிடம் மகிழ்ச்சியான வாழ்வை கேட்கிறீர்கள். குபேரரும், மஹாலக்ஷ்மியும் நீங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் நிறைவேற்றுவார்கள்.

Advertisement

செல்வத்திற்கான குபேர மந்திரம்:
” இன் ஷ்ரீம் க்ரிம் ஓம் குபேர லக்ஷ்மி கம்லா தேவநேய தான் கார்ஷினியையே ஸ்வாஹா ” இந்த மந்திரம் உங்கள் வேலைகளில் வெற்றியை பெற்றுத்தரும். இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் கூறிவந்தால் குபேரர் உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் உள்ள தடங்கல்களை நீக்குவார். அதன்மூலம் அவரின் ஆசியோடு நீங்கள் விரும்பும் வளமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

லக்ஷ்மி குபேர மந்திரம்:
” ஓம் ஸ்ரீம ஹ்ரிம் க்ளீம் இங் சவுங் ஓம் ஹரிம் கா ஈ லா ஹ்ரிம் ஹா சா கா லா ஹ்ரிம் சகல் ஹ்ரிம் சவுங் இங் க்ளிம் ஹ்ரிம் ஸ்ரீ ஓம் ” இந்த மந்திரம் பிஜா மந்திரங்களின் தொகுப்பு ஆகும். இந்த மந்திரம் உடனடி பலன்களை கொடுக்கும், எனவே இந்த மந்திரத்தை தினமும் கூற வேண்டியது அவசியம். மேலும் லக்ஷ்மி, சரஸ்வதி, காளி போன்ற துர்கா தேவியின் பத்து அவதாரங்களின் பெயர்களையும் கூறுங்கள். உங்களின் முழுக்கவனமும் கடவுளை பற்றிதான் இருக்கவேண்டும்.

Advertisement

வழிமுறைகள்:
குபேர மந்திரத்தை கூறும்போது நீங்கள் விரும்பும் பலன் கிடைக்க 21 நாட்கள் 108 முறை தொடர்ந்து கூற வேண்டும். தேவைப்பட்டால் ஜெபமாலையை கூட பயன்படுத்தலாம். பூஜை செய்யும்போது தாமரை மலர்களை பயன்படுத்துவது கூடுதல் சிறப்பாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in