2020 இல் நிகழ போகும் குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பே ராப த்து..! தப்பிக்க இந்த பரிகாரத்தை உடனே செய்யுங்கள்… எ ச்ச ரிக்கை..! – cinefeeds
Connect with us

Uncategorized

2020 இல் நிகழ போகும் குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் பே ராப த்து..! தப்பிக்க இந்த பரிகாரத்தை உடனே செய்யுங்கள்… எ ச்ச ரிக்கை..!

Published

on

குரு பகவான் இப்போது தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனது வீடான தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஐப்பசி 30ஆம் தேதி, நவம்பர் 15ஆம் நாள் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகள் பலம் பெறுகின்றன.

Advertisement

குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் சுமாரான பலன்களை பெறுவதால் பரிகாரம் செய்ய வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது. காரணம் ஜாதகத்தில் உள்ளது தசா புத்திகளும் ,கிரகங்களும் தான் எனவே பொதுவான பலன்களை படித்து நமக்கு இப்படித்தான் நல்லது கெட்டது நடக்கும் என்று பயப்பட வேண்டாம். தங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து மற்ற முடிவுகளை எடுங்கள்.

Advertisement

மேசம் – தொழில் குரு:
9,12க்குடைய குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். உங்களுடைய தொழில் காரகன் சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம். குரு அதிசாரமாக உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம் – பாக்ய குரு:
ரிஷபம் ராசிக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார்.9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். குரு உங்க ராசிக்கு 8,11க்குடையர். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

Advertisement

மிதுனம் – அஷ்டம குரு:
மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10க்குடையர் குரு பகவான் இப்போது உங்க ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டமச் சனி பாதிப்பை தரும் நிலையில் அஷ்டம குரு வந்து சனியின் பாதிப்பை சற்றே குறைப்பார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். 2021 ஆம் ஆண்டில் உங்கள் நிலைமை சிறப்பாக மாறும் நம்பிக்கையுடன் இருங்கள்

கடகம் – களத்திர குரு:
குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்கிறார். கேந்திர ஆதிபத்திய தோஷம்தான் என்றாலும் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் கண்டச்சனியால் ஏற்பட்ட கவலைகள் தீரு. குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். குரு அதிசாரமாக செல்லும் காலங்களில் ஓரளவு நன்மையைத் தருவார்.

Advertisement

சிம்மம் – ருண ரோக சத்ரு குரு:
குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வருகிறார். வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும்.

கடன் தொந்தரவு அதிகமாகும் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம்.

Advertisement

கன்னி -பூர்வ புண்ணிய குரு:
குரு 5ஆம் வீட்டில் வரப் போகிறார். புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1 என்றாலும் குரு அதிசாரமாக செல்லும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

துலாம் – சுக ஸ்தான குரு:
குரு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சுக ஸ்தானத்தில் உள்ள குரு சுகங்களை தடுப்பார் எச்சரிக்கையாக இருக்கவும். தங்கள் சுக விசயங்களை அனுபவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

Advertisement

பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு ஐந்தாம் வீட்டிற்கு அதிசாரத்தில் செல்லும் போது குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

Advertisement

விருச்சகம் -முயற்சி ஸ்தான குரு:
குரு பகவான் 3ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதால் கடந்த ஆண்டுகளில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய கடின முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இளைய சகோதர வகையில் மனஸ்தாபங்கள் நிகழும் கவனம் தேவை.

தனுசு – குடும்ப குரு:
குரு 2ஆம் வீட்டில் வரப் போகிறார். வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.

Advertisement

மகரம் – ஜென்ம குரு:
மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி கால கட்டம். குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

கும்பம் – விரைய ஸ்தான குரு:
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

Advertisement

மீனம் – லாப குரு:
குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in