சூடுபிடிக்கும் பிக்பாஸ் !! முதல்முறையாக வெளியாகும் குறும்படம் !! குறும்படம் யாருக்கு தெரியுமா ?? – cinefeeds
Connect with us

LifeStyle

சூடுபிடிக்கும் பிக்பாஸ் !! முதல்முறையாக வெளியாகும் குறும்படம் !! குறும்படம் யாருக்கு தெரியுமா ??

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சென்று கொண்டிருக்கிறது. அவ்வப்போது சில பஞ்சாயத்துக்களும் சில சுவாரஸ்யமான விஷயங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

நேற்று முன்தினம் ஆரம்பித்த பிரச்சினை நேற்று பாதி எபிசோட் தாண்டி தான் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. விட்டா நாள் முழுக்க இழுத்துருவாங்க என பிக்பாஸ் நினைத்தார் போல.

Advertisement

இந்த பிரச்சினையில் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நீங்க சொல்லல என அர்ச்சனா, ரியோ ஆகியோர் பாலாஜியிடம் விவாதம் செய்தனர். இதுகுறித்து வேல்முருகனும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நேற்று முன்தினம் பாலாவை வேல்முருகன் எழுப்பும் போதே உடம்பு முடியல என சொன்னார். ஆனால் எதற்கு வம்பு என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை வேல் முருகன் அதை சபையில் சொல்லவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் இவரு ஏன் இப்படி இருக்காரு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் இந்த வார இறுதியில் கமல் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தும்போது கண்டிப்பாக வேல்முருகனுக்கு குறும்படம் போட்டு காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி போட்டால் அதுதான் இந்த சீஸனின் முதல் குறும்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in