அட.., 37 வருசத்துக்கு முன்னாடி நதியாவோடு நடித்த சிறுவர்களா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

அட.., 37 வருசத்துக்கு முன்னாடி நதியாவோடு நடித்த சிறுவர்களா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..

Published

on

தமிழ்த்திரையுலகில், ரஜினி, கமல், பிரபு என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்திருந்தார் நடிகை நதியா. மேலும், நடிகை நதியா கடந்த 1988ல் திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ஸ்ரீனா மொய்டு என்பதுதான் நதியாவின் நிஜப்பெயர். நதியாவுக்கு இப்போது 54 வயது ஆகிறது. ஆனால் அவரது மகள்களோடு இருக்கும் புகைப்படத்தில் அவர்களுக்கு சகோதிரி போல் இருக்கிறார் நதியா. நீண்டகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்த நதியா, கடந்த 2004ல் எம்.குமரன் ச ஆப் மகாலெட்சுமி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனார்.

இந்தப்படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் நதியா. சில விளம்பரங்களிலும் இப்போது தலைகாட்டுகிறார் பூவே பூச்சூடவா நதியா. கடந்த 1984 ஆம் ஆண்டு நதியா,மோகன்லாலுக்கு ஜோடியாக நோக்கிதாதூரத்து கண்ணும் நட்டு என்னும் படத்தில் நடித்தார். இந்தப்படவே பூவே பூச்சூடவா என்னும் பெயரில் தமிழிலில் வெளியானது,

Advertisement

இந்த மலையாளப்படம் வெளியாகி 37 வருசம் ஆகிவிட்டது. இதில் சிறுவர்களாக நடித்தவர்களோடு சேர்ந்து நதியா ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், சிறுவர்களாக நடித்தவர்களுக்கு எல்லாம் வயதாகிப் போய் இருக்கிறார்கள்.ஆனால் நதியா இன்னும் அதே இளமையோடு இருக்கிறார். இந்தப்படத்தை நதியாவின் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்துவருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in