LATEST NEWS
என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது?….. பட குழுவினர் செய்த வேலையால்…. கோபத்தில் கொந்தளித்த முரளி….!!!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகர் முரளி. இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது. தமிழ் மட்டும் இல்லாமல் கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் ஒரு சாதுவான காதலராக நடிக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மக்களை தன் வசப்படுத்தியவர். இவரை பார்ப்பவருக்கு ஒரு வித பரிதாபம் ஏற்படும் வகையில் தனது நடிப்பால் மக்களை கட்டி போட்டவர். தனது கேரியரில் மிகவும் பேசப்பட்ட படம் எது என்றால் இதயம்.
இந்த படத்தின் மூலம் பெண் ரசிகர்களை கவர்ந்த இவர். அதன்பிறகு விக்ரமன் இயக்கிய புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார். ஒரு நண்பர்கள் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.
இது இந்த திரைப்படத்தில் முரளியுடன் ஆனந்த் பாபு சார்லி உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார் துணை இயக்குனராக பணியாற்றி இருப்பார். படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக முரளி ஆனதுபாபு சார்லி ஆகியோர் சென்றுள்ளனர்.
செட்டுக்கு போய் ஐந்து நாள் ஆன பிறகும் இவர்களுக்கான ஷார்ட் வரவில்லை. ரவிக்குமாரிடம் இது பற்றி கேட்க இயக்குனர் சொன்னால்தான் எடுக்க முடியும் என்று தெரிவித்துவிட்டார். இதனால் கோபமடைந்த முரளி.
நான் வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். வெகு நேரம் ஆகியும் அவர் வரவில்லை, மறுநாள் வரவில்லை, அதற்கு மறுநாளும் வரவில்லை.என்ன ஆச்சு என்று விக்ரமன் ரவிக்குமாரிடம் கேட்க நடந்ததை ஆனந்த் பாபு கூறியுள்ளார்.
உடனே வீட்டில் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று ஆனந்த் பாபு முரளி வீட்டுக்கு செல்ல முரளி மாடியில் இருப்பதாக அவர் மனைவி கூறினார். பின்னர் ஷார்ட் வந்துவிட்டது வா என்று அவர்கள் கூப்பிட முதலில் வர மறுத்துவிட்டார்.
முரளி இனிமேல் இப்படி நடக்காது என்று ரவிக்குமார் சொல்லியவுடன் முரளியை அழைத்துக்கொண்டு போனார். ஆனந்தபாபு இதை பார்த்த பலரும் படத்தில் நடிப்பதற்கு தான் சாதுவாக இருக்கிறார். ஆனால் நிஜத்தில் எவ்வளவு கோபம் வருகிறது அவருக்கு என்று கேட்டார்களாம் .
