இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற நாமினேஷன் ஆன முக்கிய போட்டியாளர்கள்…. ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!! – cinefeeds
Connect with us

LifeStyle

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற நாமினேஷன் ஆன முக்கிய போட்டியாளர்கள்…. ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷினி என போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். எலிமினேட் லிஸ்டில் கடைசி இருவராக மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இருந்த நிலையில் இறுதியில் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்றதால் எலிமினேஷன் என கார்டை காட்டி கமல் அறிவித்தார்.

Advertisement

இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்த வாரம் நாமினேஷன் குறித்த பிரமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரம் விக்ரமன், மணிகண்டன் ஆகியோர் குயின்சியையும் ரட்சிதாவையும் கூறுகின்றனர், தனலட்சுமி குயின் சி மற்றும் கதிரை கூறுகிறார். கதிரவன் ஜனனியை கூற இந்த வாரம் ப்ரோமோவில் செய்யப்பட்டுள்ள நபர்கள் கதிரவன், குயின்சி, மைனா மற்றும் ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in