என் மகன் திருமணத்திற்கு அவர்தான் பெண் பார்த்து கொடுக்கணும்…. உண்மையை உடைத்த சிம்பு தந்தை டி.ஆர்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என் மகன் திருமணத்திற்கு அவர்தான் பெண் பார்த்து கொடுக்கணும்…. உண்மையை உடைத்த சிம்பு தந்தை டி.ஆர்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில்அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான். அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது.

இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.  39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து பேசிய டி.ராஜேந்தர், சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை நான் தேர்வு செய்வதை விட என் மனைவி உஷா தேர்வு செய்வதை விட என் இல்லத்திற்கு ஏற்ற மருமகளை அந்த கடவுள் தான் சார் தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in