LATEST NEWS
பாடகர் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியின் 2 மகள்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் மக்கள் மத்தியில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. நாட்டுப்புற பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தொலைக்காட்சிகளில் பாடியது மட்டுமல்லாமல் பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
அதே சமயம் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் தனது மனைவி அனிதாவுடன் இணைந்து இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் கிட்டத்தட்ட 3000 இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார். அதேசமயம் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள குப்புசாமி விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றவர்.
இதனிடையே புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அவரின் மூத்த மகள் பல்லவி மருத்துவ படிப்பு முடித்துள்ள நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
