LATEST NEWS
சினேகா – பிரசன்னா திருமணத்தில் இப்படி ஒரு ரகசியமா?…. 12 வருடம் கழித்து அவிழ்ந்த உண்மை…. என்ன தெரியுமா….????
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா திருமணத்தில் மிகப்பெரிய ரகசியம் ஒன்று உள்ளது. அதாவது இருவரும் படங்களில் நடித்து வந்த சமயத்தில் காதலித்துள்ளனர். இது தொடர்பாக பிரசன்னா தனது பெற்றோர்களிடம் கூற அதற்கு அவரின் வீட்டில் சம்மதிக்கவில்லை.
அதன் பிறகு எப்படியோ சம்மதம் வாங்கிய பிரசன்னா சினேகாவை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வானகரம் ஸ்ரீ வெங்கடாஜலபதி மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் சினேகா ஒரு நாயுடு என்பதால் பிரசன்னா பிராமண வகுப்பை சார்ந்தவர்கள் என்பதால் இரண்டு முறை இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இரு ஜாதி முறைப்படி அனைத்து சம்பிரதாயங்களுடன் இரண்டு முறை சினேகாவுக்கு பிரசன்னா தாலி கட்டியுள்ள நிலையில் இந்த ரகசியம் பல வருடம் கழித்து தற்போது வெளியாகி உள்ளது.
