LATEST NEWS
திருமணமாகி 8 வருடம் கழித்து கர்ப்பம்…. முதல் மகனின் புகைப்படத்தை வெளியிட்டு.. ஷாக் கொடுத்த அட்லீ மனைவி பிரியா….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார்.
இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அட்லியின் மனைவி பிரியா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனிடையே அட்லியின் மனைவிஎட்டு வருடம் கழித்து திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் புகைப்படத்துடன் அட்லீ வெளியிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்களின் வளைகாப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் பிரியா தனது முதல் பிள்ளை தன்னுடைய சகோதரர் தான் என்று அவரின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய பையனா என்று கலாய்த்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
