வாரிசு ரஞ்சிதமே பாடலில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. ஜானி மாஸ்டர் சொன்ன சீக்ரெட்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாரிசு ரஞ்சிதமே பாடலில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. ஜானி மாஸ்டர் சொன்ன சீக்ரெட்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடலில் விஜய் 1.27 நிமிடத்திற்கு ஒரே சார்ட்டில் நடனமாடியுள்ளாராம். அது திரையரங்கில் பார்க்கும் போது தெரியும் என ஜானி மாஸ்டர் கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் பவன் கல்யாண் ரசிகன் நான், இப்போது விஜய்க்கு பெரிய ரசிகனாகி விட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in