LATEST NEWS
43 வயதில் ரகசிய திருமணம் முடித்த பிரேம்ஜி?…. அந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பின்னணி பாடகி….!!!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் இவர். இவரின் அண்ணன் வெங்கட் பிரபு பிரபல இயக்குனர். இவர் இயக்கம் அனைத்து படங்களிலும் கட்டாயம் பிரேம்ஜி இருப்பார். தனது தம்பிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகின்றார்.
தற்போது பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது.ஆனால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டும் தான் முரட்டு செங்கல் என்று பதில் அளித்தார். வீட்டில் பலமுறை வற்புறுத்தியும் தனக்கு திருமண ஆசை இல்லை என்று கூறி வருகிறார். இந்நிலையில் பிரேம்ஜியை பின்னணி பாடகியான வினைதா கட்டிப்பிடித்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்ற பாடலையும் அவர் பதிவிட்டுள்ளார். அதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு முன்னதாக இருவரும் காதலிப்பதாக பலமுறை கிசு கிசு வந்த நிலையில் இருவரும் மறுப்பு தெரிவித்தனர். தற்போது இப்படியான ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
