VIDEOS
ஒத்த வார்த்தையில் டைட்டில் வின்னர் அசீமை தாக்கிய விக்ரமன்…. அப்படி என்ன சொன்னார் நீங்களே பாருங்க….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக விக்ரமன், ஷிவின், அசீம் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இவர்களில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டி தூக்கினார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் மறுபக்கம் விக்ரமன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த பலரும் அசிமை விமர்சித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நேற்று லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அசீம் பற்றி கேட்ட கேள்விக்கு, விளம்பரத்திற்காக இப்படி பண்ணிட்டாரு… பாவம் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர் கொடுப்பதாக அறிவித்ததற்கு விக்ரமன் பாராட்டு தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
