Uncategorized
அரண்மனையில் ஆபத்து உள்ளது.. விலகிய சுந்தர்.சி….. படப்பிடிப்பில் நடந்தது என்ன…?
அரண்மனை 3 இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கன்னா, விவேக், யோகி பாபு நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைக்கிறார்.
இப்படமானது 2014ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. அரண்மனை 3 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020 பிப்ரவரி 20 முதல் தொடங்கவுள்ளது.

சுந்தர்.சியின் சொந்த தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த அரண்மனை 3 படத்தினை தயாரிக்கவிருந்த நிறுவனம் தற்போது படத்தில் இருந்து விலகியுள்ளது.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ஆக்ஷன் படம் வெற்றி பெறாமல் போனது அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தில் விஷால், தமன்னா, கபீர் துகான் சிங் என பலர் நடித்திருந்தனர். பல நாடுகளில் அதிக செலவில் படமாக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய அளவில் வசூலிக்கவில்லை

இந்நிலையில் அடுத்து அரண்மனை 3 படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சுந்தர்.சி, கோவை சரளா, விவேக், சம்பத், மனோபாலா, சாக்ஷி அகர்வால் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
அரண்மனை 3 ஷூட்டிங் சென்ற மாதம் குஜராத்தில் துவங்கியது. ராஜ்கோட்டில் உள்ள “வான்கணீர்” அரண்மனையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படத்தினை சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அவர்களுடன் சன் பிக்சரஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என முன்பு செய்திகள் வந்தது.
ஆனால் சன் பிக்சர்ஸ் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளது என அறிவிப்பு வந்துள்ளது. மேலும் படம் முடிந்தபிறகு அதை சன் பிக்சர்ஸ் வாங்கி ரிலீஸ் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது
