“தினமும் கனவுல வந்து பயமுறுத்துறான்” நண்பனை கொலை செய்துவிட்டு… 20 நாட்களாக தூங்க முடியாமல் தவித்த கொலையாளி … போலீசில் தானாகவே வந்து சரணடைவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தினமும் கனவுல வந்து பயமுறுத்துறான்” நண்பனை கொலை செய்துவிட்டு… 20 நாட்களாக தூங்க முடியாமல் தவித்த கொலையாளி … போலீசில் தானாகவே வந்து சரணடைவு…!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலி பகுதியில் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நடந்த கொலை வழக்கில், கொலையாளி 20 நாட்களுக்குப் பிறகு தானே காவல்துறையிடம் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். பிரபு கரக்டே மற்றும் விஷால் கதம் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். சம்பவத்தன்று ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு தகராறில், பிரபு தனது நண்பன் விஷாலை அடித்துக் கொலை செய்தார்.

கொலைக்குப் பின் பயந்துபோன பிரபு, தனது வீட்டு உரிமையாளர் சந்தேஷ் என்பவரின் உதவியுடன் விஷாலின் உடலை ஒரு சாக்கில் திணித்து, நள்ளிரவில் சிற்றோடை அருகே ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வீசி எறிந்து மறைத்தார். குற்றத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்று பிரபு நினைத்தாலும், அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

Advertisement

கொலை நடந்ததில் இருந்து 20 இரவுகளாக பிரபுவுக்குக் கடுமையான தூக்கமின்மை ஏற்பட்டதுடன், இறந்த அவரது நண்பன் தொடர்ந்து அவரது கனவில் வந்து பயமுறுத்தியுள்ளார். இந்தத் தொடர் பயங்கரக் கனவுகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு, வேறு வழியின்றி காவல்துறையிடம் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிரபு மற்றும் சடலத்தை மறைக்க உதவிய அவரது வீட்டு உரிமையாளர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in