LATEST NEWS
A.P.J அப்துல் கலாம் 8-ம் ஆண்டு நினைவு நாள்… கல்லூரியில் மரக்கன்றுகளை நட்ட நடிகர் விஷால்… வெளியான புகைப்படங்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.
திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சுனில், ,செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் டைம் ட்ராவல் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட டப்பிங் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவரும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மறைந்த தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக தனது உழைப்பால் உயர்ந்த அவரை இன்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
அதன்படி விஷால் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் விஜய் வருமா என்ற இளைஞர் விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலங்குகள் வயல்களுக்குள் நுழைவதை தவிர்க்க அங்குள்ள பயிர்களை உண்ணாமல் இருப்பதற்கு ஒரு கருவியை கண்டுபிடித்த நிலையில் அதனை விஷால் அறிமுகப்படுத்தி வைத்தார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.