LATEST NEWS
பிறருக்கு கவுன்சிலிங் கொடுத்தவருக்கே இந்த நிலையா..? பிரபல பெண் மனநல மருத்துவர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. இதுதான் காரணமா..? விசாரணையில் வெளிவந்த உண்மை..!!!
கசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஆபீசர் சிட்டி-2 குடியிருப்பில் வசித்து வந்த பெண் மனநல மருத்துவர் டாக்டர் ஹமீகா அகர்வால் என்பவர், கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருடைய தந்தை டாக்டர் ஆர். சந்திராவும் கசியாபாத்தின் பிரபல மனநல மருத்துவர் ஆவார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், டாக்டர் ஹமீகாவிற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகியிருந்ததும், அதனால் அவர் கடுமையான மன அழுத்தத்தால் (Depression) பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. விவாகரத்திற்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளுமாறு எழுந்த சமூக மற்றும் குடும்ப அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படும் நிலையில், காவல்துறை அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மற்றவர்களின் மன நலச் சிக்கல்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ஒரு பெண் மனநல மருத்துவருக்கு ஏற்பட்ட இந்த சோகமான முடிவு, மன நல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. மன அழுத்தம் என்பது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்றும், மருத்துவத் துறையில் உள்ளவர்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்றும் சுட்டிக்காட்டும் மனநல வல்லுநர்கள், இத்தகைய சூழலில் உரிய சிகிச்சை, குடும்பத்தின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவு மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றனர்.
