LATEST NEWS
அய்யோ! .. ரூ. 153 கோடி அதிர்ஷ்டம்… ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்! வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிய ‘ஒரு’ தவறு.. நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!
இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின், கடந்த 20 வருடங்களாக விடாமுயற்சியுடன் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தவர். கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடந்த குலுக்கல், அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் மெகா ஜாக்பாட் அவருக்கு அடித்தது. 12 மில்லியன் பவுண்டுகள் என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி ஆகும். இந்த நம்பமுடியாத செய்தியைக் கேட்ட அவரது தாய், மகனின் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாமல், கடையில் இருந்த மெஷினில் அந்த சீட்டை ஸ்கேன் செய்து பார்த்தார். ஆனால், அதில் எவ்வித எச்சரிக்கை ஒலியும் வராததால், அது வெற்றி பெறாத சீட்டு எனத் தவறாகக் கருதி லாட்டரி மையத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிவிட்டார்.
பரிசுத் தொகையைச் சரிபார்க்கச் சென்ற இடத்தில் சீட்டு குப்பையில் வீசப்பட்டதை அறிந்த கீத், உடனடியாக லாட்டரி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு தனக்கு விழுந்த வெற்றித் தொகை மற்றும் சீட்டின் விவரங்களைத் தெரிவித்தார். வெற்றி பெற்ற சீட்டு கையில் இல்லாததால், ரூ.153 கோடி பரிசை வென்றும் அதைப் பெற முடியாமல் அவர் தவித்து வருகிறார். தற்போது இந்த விவகாரம் குறித்து லாட்டரி நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அதற்கான முடிவை அறிய 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டு கீத் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
