CRIME
“ரூ. 3 லட்சம் பணத்திற்காக இப்படியா..?” கர்ப்பிணியை பயங்கரமாக கொன்ற பாவி.. குற்றவாளிக்கு நேர்ந்த கொடூர கதி.. போலீஸ் அதிரடி ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், கர்ப்பிணிப் பெண்ணான குடியா விஸ்வகர்மா என்பவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரூ.3 லட்சத்திற்குப் பேசப்பட்ட கூலிப்படை கொலையாளி ராம் ஆசிஷ் யாதவ் என்பவரைப் போலீசார் என்கவுண்டரில் சுட்டுப் பிடித்துள்ளனர். ருத்ராபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலைய குடியிருப்பில் அக்டோபர் 25-ஆம் தேதி இரவு, கர்ப்பிணியான குடியா விஸ்வகர்மா கழுத்தை நெரித்தும், சுத்தியலால் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகாரின் அடிப்படையில், அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், இப்பெண்ணைக் கொலை செய்ய ரூ.3 லட்சம் பணத்திற்குத் திட்டமிட்டுக் கூலிப்படை ஏவப்பட்டது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, கோரக்பூரின் காகா பகுதியைச் சேர்ந்த கூலிப்படை கொலையாளி ராம் ஆசிஷ் யாதவை அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு என்கவுண்டரில், கொலையாளியின் இடது காலில் தோட்டா பாய்ந்ததைத் தொடர்ந்து அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய அவனது கூட்டாளி ஒருவனை போலீசார் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
