LATEST NEWS
“பிரபல கிரிக்கெட் வீரரின் பிறந்தநாளில் கலந்து கொண்ட நடிகர் அஜித்”…. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

#image_title
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அர்பைஜானில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் நடிகர் அஜித்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. உடல்நிலை தேறிய அஜித் மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கின்றார். எப்போது

#image_title
விடாமுயற்சி படத்தின் அப்டேட் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் அஜித் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளருமான நடராஜனின் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இவர் நேற்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். இவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அஜித் குமார் நடராஜனுக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…

#image_title