CINEMA
தன்னுடைய ரோல் மாடலுடன் செல்பி எடுத்த நடிகர் அஜித்…. அவர் யார் தெரியுமா….??

நடிகர் அஜித் கடைசியாக விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமா தவிர்த்து கார், பைக் பிரியரான நடிகர் அஜித் அடுத்தடுத்து கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி ஷாலினி விலை உயர்ந்த Ducati பைக் ஒன்றை பரிசளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9 கோடி ரூபாய் மதிப்பிலான Ferrari கார் ஒன்றை அஜித் வாங்கியிருந்தார். தற்போது Porsche gt3 என்ற 4 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அவ்வப்போது அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் தனது ரோல் மாடல் Ayrton Senna போட்டோவுடன் செல்பி எடுத்துள்ள ஸ்டில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் Ayrton Senna பிரேசில் நாட்டை சேர்ந்த கார் ரேஸர். மூன்று முறை பார்முலா-1 உலக சாம்பியன் ஆன அவர் பார்முலா ஒன் ரேஸில் நடந்த விபத்தில் மரணமடைந்தார். ‘அவர் கார் ரேஸர் என்பதால் மட்டும் பிடிக்கும் என்பதில்லை,.அவர் ஒரு philosophical நபர். அவருடைய பேச்சு மிகவும் ஆழமானதாக இருக்கும். அவர் என்னுடைய ரோல் மாடல்’ என்று நடிகர் அஜித் முன்னதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.