CINEMA
என்னிடம் அரசியல் பற்றி கேள்வி கேட்காதீர்கள்…. அதிரடி காட்டிய நடிகர் ரஜினி…!!
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பரவும் செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர் என்னிடம் அரசியல் பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்று உங்களிடம் சொல்லி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து வேட்டையன் படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதாவது வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது இதற்கு தெரியாது என்று கூறியுள்ளார் ரஜினி.