LATEST NEWS
தளபதி புகைப்படத்தை பயன் படுத்தும் : தனுஷ் கர்ணன் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ…?

தற்போது இளைஞர் மத்தியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகராக நடிகர் தனுஷ் வளம் வருகிறார். இவரது பட்டாசு திரைப்படம் கமெர்சியல் வெற்றி பெற்ற நிலையில் இதை தொடர்ந்து தனுஷ் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இப்படமும் முடியும் தருவாயில் உள்ளது.இத்திரைப்படத்தை மாரிசெல்வராஜ் என்னும் இயக்குனர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புதிய மாஸ்ஸனா புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
இப்புகைப்படத்தில் வயல்வெளியில் ஒரு அழகான இயற்கை காட்சியில் தனுஷ் ஒரு குதிரையுடன் நின்று கொண்டு இருக்கிறார்.இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் தனுஷின் டீ-சர்ட்-ல் தளபதி ரஜினிகாந்த் புகைப்படம் உள்ளது. இந்நிலையில் பல திரைப்படங்களில் நடித்து வரும் அவர் கூடிய விரைவில் கர்ணன் ஷூட்டிங் முடிந்ததும் தனுஷ் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.