LATEST NEWS
விரைவில் கார்த்திக் திரைப்படத்தின் இரண்டாவது பாகம்…! வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

கார்த்திக் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கார்த்திக் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக ராணுவ உளவாளியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்திருந்தார்.
கார்த்திக் நடிப்பில் ஏற்கனவே வெளியான விருமன், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெற்றது இதனால் சர்தார் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. கார்த்திக் அழைப்பு உள்ள பேட்டியில் சர்தார் படம் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது .
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இரண்டாம் பாகம் எடுக்கும்படி ரசிகர்கள் வேண்டினார்கள் . எனவே சர்தார் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறி உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். கார்த்திக்கின் கைதி 2 திரைப்படம் உருவாகஉள்ளது குறிப்பிடத்தக்கது.