CINEMA
4 வருஷமா..! வடபழனிக்கும், வீட்டுக்கும் நடந்துகிட்டே இருக்கேன்…. கண்ணீர் மல்க பேசிய லொள்ளு சபா மனோகர்…!!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு நடிகர் லொள்ளு சபா மனோகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனக்கு ஒரு தயாரிப்பாளர் 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இதுதொடர்பாக நடிகர் சங்கத்திடம் புகார் கூறியும் எந்த பலனும் இல்லை.
கோர்ட்டில் 4 வருடங்களாகவே இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. வடபழனிக்கும், வீட்டுக்கும் நடந்துகொண்டே இருக்கிறேன் என கண்ணீர் மல்க வேதனையை வெளிப்படுத்தினார்.