LATEST NEWS
மகளை பிரிந்த விஜய் ஆண்டனி எப்படி இருக்கார் தெரியுமா?.. பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவலால் கலங்கிப்போன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. அதில் மூத்த மகளான மீரா சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. விஜய் ஆண்டனியின் மகள் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி மனநிலை தற்போது எப்படி உள்ளது என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த அவர், விஜய் ஆண்டனி பழ மணி நேரமாக ஒரு துளி தண்ணீர் கூட குடிக்கவில்லை. அவரை இப்படி பார்க்க முடியவில்லை என்றும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ள அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.