VIDEOS
தினமும் கார்ல கூட்டிட்டு போய் 2000 ரூபாய் கொடுக்கிறேனா?.. என்னப்பா சொல்றீங்க… நடிகர் விமல் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விமல். இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கிரீடம்,குருவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார். இவர் முதல் முதலாக 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து களவாணி,கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தெய்வ மச்சான் மற்றும் குலசாமி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் இவர் துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விமல், தான் மது குடிப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆகிவிட்டதாகவும் இருந்தாலும் தினமும் தான் ஒவ்வொரு இயக்குனராக கூட்டிச் சென்று சரக்கு அடித்து விட்டு 2000 ரூபாய் கொடுத்து அனுப்புவதாக சிலர் அவதூறு பரப்புவதாக கூறினார். வாய்க்கு வந்ததை எல்லாம் யூட்யூபர்கள் சிலர் எழுதி விடுவதாக தெரிவித்த நடிகர் சௌந்தர்ராஜன் யூட்யூபர்களுக்கு ஒரு எக்ஸாம் வைக்க வேண்டும் என அரசுக்கு தான் கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க