VIDEOS
நயன்தாரா கிட்ட என்னால அந்த மாதிரி கேட்க முடியாது… அது அவங்க இஷ்டம்… நடிகர் விஷால் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். இவர் பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரின் கீழ் படங்களை தயாரித்து வருகிறார்.
நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்த விஷால் அதன் பிறகு நடிகராக செல்லமே திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு மற்றும் தாமிரபரணி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிசியான நடிகராக மாறிவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக விஷால் கடந்த அக்டோபர் 2015 ஆம் ஆண்டு முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தை தொடங்கிய பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் விஷால் அளித்த பேட்டி ஒன்றில், நடிகைகள் பட ப்ரமோஷனுக்கு கலந்து கொள்வது தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த விஷால், நடிகை நயன்தாரா எந்த ஒரு பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. அவரை நீங்கள் வந்து ஆக வேண்டும் என சொல்லி யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதற்கு நான் ஒன்னும் பள்ளிவாசலியர் கிடையாது நடிகர் சங்க பொதுச் செயலாளர் மட்டுமே. தனக்கு விருப்பமில்லை என்று சொல்லும் போது நாம் ஒன்றும் கூற முடியாது என்று நயன்தாரா பற்றி அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.