VIDEOS
விஜய்யின் வாரிசு சூட்டிங் வீடியோவை வெளியிட்ட நடிகர் யோகி பாபு…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது. இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்த படத்தில் அமைகின்றது. இந்தத் திரைப்படத்தில் திரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இன்னும் சில நாட்களில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இப்போது வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் விஜய் buggy ஓட்டும் வீடியோவை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
— Yogi Babu (@iYogiBabu) January 28, 2023