LATEST NEWS
3 “வருடம் பதுங்கி இருந்த லட்சுமி மேனன்”..! ‘தற்போது எந்த நடிகர் மீது பாய்யப்போகிறார்’.. தெரியுமா..?

தமிழ் சினிமாவில் இளைய திலகம் பிரபுவின் மகன் முதன் முதலாக நடித்த கும்கி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் பெற்றது, அப்படத்தை தொடர்ந்து லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு. நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இளம் பெண்ணான லட்சுமி மேனன் தமிழில் ஒரு ரவுண்டு வந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என நினைத்திருந்த நிலையில் ஆனால் அவர் சில திரைப்படங்களை மட்டுமே நடித்து வந்தார். ஆரம்ப காலத்தில் இவர் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ஹோம்லி நடிகை என பெயர் வாங்கிவிட்டார். பின்னர் படவாய்ப்புகள் குறைந்ததால் திடீரென மாடன் உடைக்கு அதிரடியாக மாறினார்.
இவரின் உடல் பருமான், அதிகரித்ததால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது பின் பெற்றோர்கள் திருமணம் செய்யப்போகிறார்கள் என தகவல் கசிந்தது பின்பு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தார்.
உடல் பருமனை குறைக்க தீவிர உடற்பயிற்சி செய்து வந்த லட்சுமி மேனன். இளம் நடிகர் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகிறார். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு இடைவெளிக்கு பிறகு நடிகை லட்சுமி மேனன் நடிக்கும் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.