அதிக முறை ஜெயிலுக்கு போன ஒரே நடிகை நான் தான்… 80s நடிகை லட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிக முறை ஜெயிலுக்கு போன ஒரே நடிகை நான் தான்… 80s நடிகை லட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லட்சுமி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து புகழ்பெற்றவர். இந்த திரைப்படத்திற்கு முன்பு பல நூறு படங்கள் லட்சுமி நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேசமயம் பிலிம்பேர் விருதுகள், கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசு விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். அவரும் ஒரு நடிகை தான். சூர்யா நடிப்பில் வெளியான ஆறு திரைப்படத்தில் ரவுடி பொம்பளை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் ஐஸ்வர்யா.

Advertisement

இந்நிலையில் தற்போது சினிமாவிலிருந்து விலகி இருக்கும் நடிகை லட்சுமி சமீபத்தில் ஒரு பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, தமிழ் சினிமாவில் அதிக முறை ஜெயிலுக்குச் சென்ற ஒரே நடிகை நானாகத்தான் இருக்க முடியும். தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக உண்மையிலேயே ஜெயிலுக்கு சென்று உள்ளேன்.

அப்படி ஒரு நாள் சேலம் ஜெயிலுக்கு படப்பிடிப்பிற்காக சென்று இருந்தபோது சிறையில் இருந்த தூக்கு தண்டனை கைதி ஒருவன் என்னை பார்த்து கண்ணடித்தான். அப்போது என்னுடன் ஆச்சியும் இருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆச்சி என்ன இப்படி செய்கிறாய் என கேட்டதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் எனக்கு தூக்கு தண்டனை வழங்கப் போகிறார்கள் அதற்கு முன்பு இருவரையும் பார்த்து கண்ணடித்து கொள்கிறேன் இதனால் என்ன நடக்கப் போகிறது என்று கூறினார்.

Advertisement

அப்போது அந்த கைதியின் ஆட்டிட்யூட் எனக்கு மிகவும் பிடித்தது. எப்போது வேண்டுமானாலும் தூக்கு அதற்கு முன்பு சந்தோசமாக இருக்கலாமே என்று அவர் கூறியது என்னை கவர்ந்தது. அதனைப் போலவே ஒரு சம்பவம் பெங்களூரு ஜெயிலிலும் நடந்தது என்று லட்சுமி சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in