LATEST NEWS
மருதமலை பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாலும் தற்போது காணாமல் போன நடிகைகள் ஏராளம். அந்த வரிசையில் உள்ளவர் தான் மீரா சோப்ரா. முதலில் எஸ் ஜே சூர்யா தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திய அன்பே ஆருயிரே திரைப்படத்தில் மீரா சோப்ரா ஹீரோயினியாக அறிமுகமானார்.
தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அசத்தியதால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி நடிகர் அர்ஜுன் மற்றும் வடிவேலு நடித்த மருதமலை திரைப்படத்தில் இவர் ஹீரோயினியாக நடித்தார். அந்த திரைப்படத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இவர் அதன் பிறகு படங்களில் நடிக்காமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் மற்றும் வெப் சீரிஸ் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு 39 வயதாகும் நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அதிக கிளாமர் போஸ் கொடுத்து லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மருதமலை பட நடிகையா இது என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
