CINEMA
“கட்டாயம் வரணும்” முக்கிய பிரபலத்தை நேரில் சந்தித்து….. திருமணத்திற்கு அழைப்பு விடுத்த நடிகை மேகா ஆகாஷ்….!!

தமிழ் சினிமாவில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தனுஷிற்கு ஜோடியாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடலின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
அந்தவகையில் நடிகை மேகா ஆகாஷுக்கும் அவரது காதலரான மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகன் சாய் விஷ்ணுவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் செப் 15ஆம் தேதி இவர்களுடைய திருமணம் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஜோடி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.