LATEST NEWS
மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை…! சினிமாவை விட்டு விலகும் அவலம்…?

முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான புலி படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ‘நிகேஷா பட்டேல்’ இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். படித்து வளர்ந்த தெல்லாம் லண்டனில் தான்.
இவர் தலைவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். இவர் குறிப்பாக கிளாமர், அழகு காட்டி வந்த நடிகை மேலும் தமிழில் என்னமோ ஏதோ, 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மார்கெட் ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நிகேஷா பட்டேல் நடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. மேலும் நடிகைக்கு எந்த ஒரு பட வாய்ப்பு இல்லத்தை காரணத்தால் தற்போது கையில் இருக்கும் படங்களை முடித்துகொடுத்து லண்டனில் தங்க முடிவெடுத்து விட்டாராம். அங்கு படங்களிலும். டிவி நிகழ்ச்சிகளிலும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.