LATEST NEWS
முதல் படத்துல அதுனா எனக்கு என்னனே தெரியாது… பல வருட உண்மையை உளறி கொட்டிய ராதிகா…!!

விஜய் டிவியில் தற்போது கதாநாயகி என்ற ரியாலிட்டி ஷோ ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பாலா மற்றும் குரேஷி ஆகியோர் தொகுத்து வழங்கும் நிலையில் நடுவர்களாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ராதிகா, தன்னுடைய முதல் படத்தில் இயக்குனர் என்னை வெட்கப்பட சொன்னாரு. அப்போ நான் அப்படி என்றால் என்ன என்று கேட்க அவர் எனக்கு குளோசப் வச்சிட்டு ஒரு குச்சி எடுத்து இடுப்புல அந்த குச்சியால தொடுவாரு, அப்போ நான் ஒரு மாதிரி சிரிப்பேன், அதை தான் வெட்கம் என்று அவர் கூறினார்.
அப்போதுதான் வெட்கம் என்றால் என்ன என்று எனக்கு தெரியும் என்று ராதிகா கூறினார். மேலும் நரம்பில்லாத நாக்கில் எல்லோரும் நிறைய பேசுவாங்க யார் பேசுறது நாம கேட்க கூடாது எனவும் நம் கனவுகள் நிஜமாக வேண்டும் என்றால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ராதிகா சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.