CINEMA
டீப்பேக் வீடியோவால பாதிக்கப்பட்டேன்…. இனி பயப்பட வேண்டாம்… ராஷ்மிகா வெளியிட்ட வீடியோ…!!!

கன்னட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவருடைய படங்கள் பெரிதாக பேசப்படாத நிலையில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு விஜய தேவரகொண்டாவோடு நடித்த கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதன் பிறகு தமிழிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இப்படி நடிப்பில் பிசியாக இருந்து வரும் ராஷ்மிகா சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் டீபேக் வீடியோக்கள் புகைப்படங்கள் நாள்தோறும் பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பாதிப்படைந்து கொண்டே உள்ளனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரஷ்மிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், டீபேக் வீடியோவால் நான் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டேன் என்பது குறித்து உங்களுக்கு தெரியும். அதன் பின்னர் நான் தைரியமாக புகார் அளித்ததால் இந்திய சைபர் கரம் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram