VIDEOS
பிரபல பாடகியின் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய நடிகை சமந்தா.. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். . முதலில் ஆன்மீக பயணம் அதன் பிறகு தோழிகளுடன் வெளிநாட்டு பயணம் என நேரத்தை செலவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் க்யூட்டான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சமந்தா தன்னுடைய நெருங்கிய தோழியும் பாடகியுமான சின்மயி குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகின்றார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
#Samantha With #Chinmayi Kids pic.twitter.com/B8rqivOy2X
— chettyrajubhai (@chettyrajubhai) August 7, 2023