VIDEOS
தமிழ் சினிமாவின் உண்மையான டாப் 3 நடிகர் இவர்கள்தான்.. உண்மையை கூறிய பிரபல தயாரிப்பாளர்.. அப்போ இந்த லிஸ்ட்ல ரஜினிக்கே இடமில்லையா..??

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகிய மூன்று நடிகர்கள் தான் டாப் 3 இடத்தில் உள்ளனர். ஆனால் இந்த மூன்றாவது இடத்திற்கு சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயனை பலரும் கூறிவரும் நிலையில் இது மிகவும் வருத்தம் அளிப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார். இரண்டு முறை தேசிய விருதை வாங்கிய இவர் தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் சூர்யாவை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக அவருடைய இடத்திற்கு சிவகார்த்திகேயனை கொண்டு வந்து புதுசாக முயற்சிக்கிறார்கள். அதற்காக சிவகார்த்திகேயனை குறைத்து மதிப்பிட நான் விரும்பவில்லை. அவருக்கு வேண்டுமானால் நான்காவது இடத்தை கொடுத்து விடலாம். இருந்தாலும் நான்காவது இடத்தில் கடுமையான போட்டியாளராக தனுஷ் உள்ளார்.
இதனால் வேண்டுமென்றே சிவகார்த்திகேயனை உயர்த்தி பிடிக்க வேண்டும் என பலரும் அவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே தமிழ் சினிமாவில் டாப் 3 என்றால் அது விஜய், அஜித் மற்றும் சூர்யாவாக தான் இருக்க முடியும். இதில் யாருமே உள்ளே நுழைய முடியாது. தற்போது விஜய் மற்றும் அஜித்தை போலவே சூர்யாவிற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் உள்ளது.
ஆனால் அவருக்கு சரியான படங்கள் தான் தற்போது அமைவதில்லை. நிச்சயம் ஒரு பெரிய திரைப்படம் மட்டும் அமைந்தால் டாப் 2 இடத்திற்கு சூர்யா டஃப் கொடுப்பார். அந்த அளவிற்கு மிகவும் திறமைசாலி தான் நடிகர் சூர்யா என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.