VIDEOS
கயல் கழுத்தில் சட்டென தாலி கட்டிய எழில்… அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன்… வெளியானது கயல் சீரியல் ப்ரோமோ…!!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி தற்போது டாப் லிஸ்டில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் கயல். இந்த சீரியலில் ராஜா ராணி சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சைத்தாரிட்டி நடித்து வருகின்றார். டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் சீரியலில் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் எழில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் பல கனவுகளுடன் ஆர்த்தி திருமணத்திற்கு தயாராகி வருகின்றார். அவரை எப்படியாவது எழிலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கயல் ஏற்பாடு செய்து வரும் நிலையில் எழில் கயலை பல ஆண்டுகளாக காதலித்து வருவதால் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் இருக்கின்றார்.
இந்நிலையில் எழில் கையில் தாலியை கொடுத்து அனைவரும் கட்ட சொல்லும் நிலையில் தாலியை கட்ட எழில் தயங்கிக் கொண்டிருக்கும்போது கயல் திடீரென கீழே குனிகிறார். உடனே எழில் அவருடைய கழுத்தில் தாலியை கட்டி விடும்படி ப்ரோமோ வெளியாகி உள்ளது. உடனே கோபமடைந்த கயலின் பெரியம்மா அவருடைய கழுத்தை நெறித்து கோபப்படுகின்றார். இவ்வாறான பரபரப்பான திருப்பங்களுடன் பிரபு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.