LATEST NEWS
நெருக்கமான புகைப்படத்தை வெளியிடுவேன்….! முன்னாள் காதலன் மிரட்டியதால்…. நடிகை எடுத்த விபரீத முடிவு ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான வைஷாலி தாக்கருக்கு சமீபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னர் முன்னாள் காதலன் தன்னை வற்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.இவரின் முன்னாள் காதலன் ராகுல் என்பதும் அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.
வைஷாலி தூக்கில் தொங்கியதும் தப்பி ஓடிய ராகுலை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரின் மனைவி தலைமறை வாகி விட்டார். இந்நிலையில் தற்கொலைக்கான காரணத்தை வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் என்பவர் கூறியதாவது வைஷாலி உடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி ராகுல் மிரட்டி வந்துள்ளார்.
உனக்கு திருமணம் ஆனதும் என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உனது கணவரிடம் காட்டுவேன் என்று கூறியுள்ளார். வைஷாலியை எங்கேயும் நகர விடாமல் சித்திரவதை செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைஷாலி உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கூறியுள்ளார் . அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.