CINEMA
பிரஷாந்த் வேண்டாம்னு ஒதுக்கிய அந்த படத்தில் அஜித்…. சூப்பர் ஹிட் அடிச்சதாமே…!!

90களில் அஜித், விஜய் காட்டிலும் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் தான் பிரசாந்த். ஆனால் சில காரணத்தால் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு திரும்பவும் அந்தகன் படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் கடந்த 2000 வருடம் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் அஜித் நடிப்பதற்கு முன்னாள் பிரசாந்தை தான் படக்குழு அணுகி உள்ளது. ஆனால் சில காரணத்தால் அவர் நடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.