CINEMA
சாதி, மதம் மக்களை வெறுக்க வைக்கும்…. நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் கருத்து வைரல்..!!

நடிகர் அஜித் கடைசியாக விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமா தவிர்த்து கார், பைக் பிரியரான நடிகர் அஜித் அடுத்தடுத்து கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வருகிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி ஷாலினி விலை உயர்ந்த Ducati பைக் ஒன்றை பரிசளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9 கோடி ரூபாய் மதிப்பிலான Ferrari கார் ஒன்றை அஜித் வாங்கியிருந்தார். தற்போது Porsche gt3 என்ற 4 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அவ்வப்போது அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது புதிய கார் பந்தய அணியையும் தொடங்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பயணங்களின்மூலம் உங்களை சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். அது உங்களை நல்ல மனிதனாக்கும். சாதி, மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிகிறது ஏற்க்க ஊற்று உண்டு. அது ரொம்பவே உண்மை என்று கூறியுள்ளார்.
Being around my man you will start being a better person. His positive energy is infectious. You will empathise for everyone around you.
Let’s spread love and make this world a better place to live ❤️❤️#AK #AjithKumar #Thala pic.twitter.com/aEnNG0CO4e— Aarav Kizar (@Aravoffl) October 5, 2024